Mugund

Education – Periyar.

Posted in Periyar by mugund on April 2, 2009

“கல்வியானது நிகழ்காலத்திலும், எதிர்காலத்திற்குமாக ஓர் இணையற்ற முதலீடு… கல்வி அனைவருக்கும் தேவையான ஒன்று. சமத்துவம், சமயச் சார்பின்மை, சனநாயகம் போன்ற அரசியல் சட்டத்தில் காணப்படும் உயரிய குறிக்கோளுடைய கல்வியே உகந்த வழி; மேலும் நம் பொருளாதாரத்தில் பல்வேறு நிலைகட்கும், பிரிவுகட்கும் தேவையான தேர்ந்த மனித சக்தியை உருவாக்கி வழங்கக் கூடியது கல்வி மட்டுமேயாகும்.” – பெரியார்

Tagged with:

Downadup worm??? [ conflicker ]

Posted in Uncategorized by mugund on March 28, 2009

In recent history no Worm has forced these many people to think – And what bad is still no one has clue what face this worm will show to this world. [since its programmed to be triggered at April-1, will wait for some more days with finger-crossed].

But we can do something in our perimeter to defend ourselves from this Worm :

1. Immediately apply the patch (?) delivered by Microsoft. [ MS08-067 ] . It has also given a number of other workarounds like disabling the browser service etc., For more information link to – http://blogs.technet.com/srd/archive/2008/10/23/More-detail-about-MS08-067.aspx

2. Make sure you are protected with top antivirus softwares in the market and its definition were up-to-date. [ preferably Norton ]

3. If you were connected with a network make sure you were protected by host based firewall softwares.

4. If possible try to block access to TCP port 139 and 445 at network perimeters.

For downloading / information on this critial microsoft patch visit,

http://www.microsoft.com/technet/security/Bulletin/MS08-067.mspx

பெரியார் – சுபவீ

Posted in Periyar by mugund on March 18, 2009

விளக்கை ஏற்றி
வெளிச்சம் தந்தவர்கள் உண்டு
நீயோ
உன்னையே எரித்து
வெளிச்சம் தந்தாய்
எங்களுக்கு நீதான்
எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்
நாங்களோ இன்னும்
நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை
எங்களுக்காகவே
நீ வாழ்ந்தாய்
மன்னித்துவிடு தந்தையே
நாங்களும்
எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Tagged with:

PIFTS.exe : Its Nothing Serious to worry about !!!

Posted in Technical Interests by mugund on March 14, 2009

Below is the snippet released by Symantec regarding the latest buzzing around its Norton Consumers regarding the “PIFTS.exe” [has the detailed explanation about want went wrong and it didn't pose any security risks].

Symantec released a diagnostic patch “PIFTS.exe” targeting Norton Internet Security and Norton Antivirus 2006 & 2007 users on March 9, 2009. This patch was released for approximately 3 hours (4:30 – 7:40 PM March 9, 2009 Pacific Time). In a case of human error, the patch was released by Symantec “unsigned”, which caused the firewall user prompt for this file to access the Internet. The firewall alert for the patch caused understandable concern for users and began to be reported back to Symantec. Releasing a patch unsigned is an extremely rare occurrence that does not pose any security issues to our users. The patch reached a limited number of Norton customers and has subsequently been pulled from further distribution. Norton users are fully protected and do not need to take any action as a result of this issue.

More information at :

http://community.norton.com/t5/Norton-Protection-Blog/Chocolate-Covered-PIFTS-X-Files-amp-Mea-Culpas/ba-p/76311#A285

Tagged with: , ,

பெரியார் பார்வையில் “தீண்டாமை”

Posted in Periyar by mugund on March 9, 2009

தீண்டாமையை ஒழிக்க வைத்தியர்கள் டாக்டர்கள் போல் முயன்று, தீண்டப்படாதவர் என்ப வர்களுக்கு எல்லா இடங்களிலும் சமத்துவம் அளிக்க வேண்டும் என்பது போன்ற சீர்திருத்தங் கள் செய்பவர் பலர். ஆனால், நாங்கள் தீண்டாமை ஏன்? எப்படி வந்தது? என்று பார்க்கி றோம். மதத்தால் அவர் கள் தீண்டப்படாதவர்கள் என்ற பதில் வருகிறது. மதத்தால் ஏன் தீண்டப்படாதவர்கள் என்று கேட்கிறோம்? அது சாஸ்திர சம்மதம் என்கிறார்கள். இந்த சாஸ்திரம் எப்படி வந்தது என்றால், அது ஆண்டவன் ஆணை என்கிறார்கள். அப்படியானால்
தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவு அளிக்கும் சாஸ்திரத்தையும், அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்கிறோம்…!

————— தந்தைபெரியார் – “விடுதலை” 16.4.1950

Tagged with:

பெரியார் ராசிக்காக பச்சைக்கல் மோதிரம் அணிந்திருந்தாரா?

Posted in Periyar by mugund on March 2, 2009

பெரியார் ஒரு பெரிய பச்சைக்கல் மோதிரம் போட்டிருப்பார். கடைசிவரையில்
எந்தச்சுழ்நிலையிலும் பெரியாரின் கையைவிட்டு அதைக் கழற்றவேயில்லை.
இதைப்பற்றிய பல விமர்சனங்கள் உண்டு. ஒவ்வொரு துறையைச்சார்ந்தவர்களும்
அதற்கொரு விளக்கம் சொல்வார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் யாரும்
பெரியாரின் பக்கம் கூடப் போயிராதவர்கள்.

சோதிடர்கள் – பெரியாரின் நீண்ட ஆயுளுக்கும் பெரும் பணவசதிக்கும்
காரணமாகப்பெரியாரின் இராசிப்படி ஒரு பெரும் ஜோதிடரானமுனிவர் சொற்படிப்
பச்சைக் கல்லை அணிந்திருக்கின்றார் என்றார். சித்த மருத்துவரான ஒரு பெரிய
சாமியார் என்னிடம் சொன்னார். ‘இரசவாதம் தெரிந்த ஒரு பெரிய
முடிவர்பாதரசத்தைக் கல்லாகித் தனது தவ வலிமையால் அதற்குப் பச்சை
நிறம்கொடுத்து – பெரியார் சாமியாராய்த் திரிந்த காலத்தில் அவருக்குக்
கொடுத்தார். அந்தத் தவ வலிமைதான் பெரியாரை எந்த எதிரியும்; ஏவல்;
பில்லி;சூனியம்; மாந்திரிகம்;தாந்த்ரிகம் எதனாலும் அசைக்க முடியவில்லை.
என்றார். சீர்திருத்தக்காரர்களான சில நண்பர்களே ‘நகைப் பைத்தியம் கூடாது
என்று பெரியார் ஏன் இந்த மோதிரம் போட்டார்’ என்று மேலே சொன்ன புகார்களை
மறைமுகமாய் நம்புகிற மாதிரிப் பேசியதும் உண்டு.

தென்மாவட்டங்களில் பெரியாரின் சுற்றுப்பயணம், சீருந்து நாகர்கோவில்
சாலையில் போய்க்கொண்டிருக்கின்றது. அய்யா எதைப்பற்றியோ ஆர்வமாய்
பேசிக்கொண்டு வந்தார். நான் கன்னத்தில் கையூன்றியபடிக் கூர்ந்து
கேட்டுக்கொண்டே வந்தேன். என் விரலில் புதியதாய் ஒரு பெரிய மஞ்சள் கல்
வைத்த மோதிரம் போட்டிருந்தேன். பெரியார் அவர்கள் அவருக்கு
நெருக்கமானவர்கள் புதிதாய்க் கடிகாரம்,மோதிரம், பேனா ஆகியவற்றை
வைத்திருந்தால் குழந்தைபோல் வாங்கி அதன் விலை, தயாரிப்பு, சிறப்புகளைப்
பற்றி விசாரிப்பார்.

என்னுடைய மோதிரத்தை வாங்கி அதன் பெரிய கல்லை உற்று உற்றுப்
பார்த்துவிட்டு “என்ன விலை என்றார் நான் “இருபது ரூபாய்” என்று சொல்லி
இரண்டு விரங்களைக் காட்டினேன். ” என்ன! இரண்டாயிரமா” என்றார். “இல்லை.
வெறும் இருபது ரூபாய்” என்று சொல்லி, “என்னுடைய வீடு இருக்கும் உறையூர்
பகுதியில்தான் இது போன்ற செயற்கை வைரக் கற்கள் தயாரிக்கிறார்கள்”
என்பதையும் சொன்னேன்.

“எந்த வித்தியாசமும் அசலுக்கும் போலிக்கும் தெரியலையே” என்றார் பெரியார்,
“போலிக்குப் பெருமையே அது தான்யா” என்றேன். பெரியார் பின்னால்
உட்கார்ந்திருந்த மணியம்மைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் பலமாய்ச்
சிரித்தார். ஏனென்றால் அந்த வாக்கியத்தை அடிக்கடிப் பயன்படுத்துபவர்
அய்யாதாம். வேறு பல பொருள்களும் உண்டு!

இது தான் சரியான சமயம் என்று பெரியாரிடம் கேட்டனர். அது வண்டிக்குள்
எப்போதும் இருக்கும். பலரின் சந்தேகமும் கூட, ஆம்! பெரியாரின் பச்சைக்
கல் மோதிரம் பற்றியச் சந்தேகம்தான். அய்யாவிடம் கேடகப் பலருக்கும் பயம்.
பெரியார் தம் மோதிரததை ஒரு முறை திருப்பித் திருப்பிப் பார்த்துக்
கொண்டார். “அதுவா” என்றார்.

கொஞ்சம் சகஜ நிலையில் இருக்கின்றார் என்று கண்டு கொண்ட நண்பர் தென்பாதி
பெரியசாமி (கலைஞரின் புகைப்படக் கலைஞர் சிங்காரத்தின் தம்பி மாமனார்)
மோதிரம் பற்றிப் பலரும் எழுப்பும் சந்தேகங்களை மெல்லக் கூறினார்.
“அப்படியா.. நாசமாப்போச்சு.. போ.. இதை ஏன் முதலிலேயே எங்கிட்ட கேக்கலே”
என்றார் பெரியார்.

யாரும் ஏதும் சொல்லவில்லை பெரியாரே மீண்டும் பேசினார். “எங்க கோயமுத்தூர்
ஜில்லாவுல வெள்ளக் கோவில்லே ஒருசெட்டியார் மஞ்ச நோட்டீசு குடுத்திட்டார்…
(இன்சால்வென்சி). அவரோடு சொத்தெல்லாம் ஏலம் போச்சு.. நானும்
போயிருந்தேன். அப்ப தங்கம் ஒரு பவுன் பதின்மூன்று ரூபாய்!(ரூ.13). அப்ப
இந்தப் பச்சைக் கல்லும் ஏலத்துக்கு வந்தது. இந்தப் பச்சைக் கல் மோதிரம்
போட்டப்புறம் தான்செட்டியார் திவாலாயிட்டார் என்று யாரும் ஏலம் கேட்கலே.
சர்க்கார் மதிப்பு அப்போ இருநூற்றுப் பதினைஞ்சு ரூபாய். நான் ஒரு ரூபாய்
கூட கொடுத்து இருநூற்றிப் பதினாறுக்கு வாங்கினேன். பலபேரு இதைப் போட
வேண்டாம். செட்டியாரைத் திவாக்கின கல்லுன்னாங்க. நான் என்னதான் ஆகுதுன்னு
பாப்போமேன்னு மோதிரமாகக் கட்டிப்போட்டேன்…. எங்க வீட்டில் சில பேருக்குத்
திவால் பயம்.. நடந்தத்து என்ன தெரியுமா? எனக்குப் பணம் குவியுது…
குவியுது.. என்ன பணறதுன்னே தெரியலே.. குவியுது..” என்றார், சிறுபிள்ளை
போல் கைகளை தட்டிக்கொண்டே..

——————நன்றி:- http://www.thanthaiperiyar.org

Kashmir Issue – Babasaheb view :

Posted in Ambedkar by mugund on February 10, 2009

காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது என் உறுதியான கருத்து

அசாத்தியமானதைச் செய்ய முனையும் இந்த கொள்கை (வெளியுறவுக் கொள்கை) மிகவும் ஆபத்தானது. இதனால் ராணுவத்துக்கு கோடி கோடியாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதன் விபரீத விளைவு என்ன? பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை; நமது நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் நாம் பெறும் 350 கோடி ரூபாய் வருமானத்திலிருந்து கிட்டத்தட்ட 180 கோடி ரூபாயை ராணுவத்திற்காகச் செலவழிக்கிறோம். இது மிகப் பெரிய செலவாகும். இந்த அபரிமிதமான செலவீனம், நமது வெளியுறவுத் துறைக் கொள்கையின் நேரடி விளைவாகும். அவசரத் தேவையின் போது நம் உதவிக்காக நாம் நம்பியிருக்கக்கூடிய நண்பர்கள் எவரும் நமக்கு இல்லை என்பதால், நமது பாதுகாப்புக்கான செலவு முழுவதையும் நாமே ஏற்க வேண்டியுள்ளது. இத்தகைய வெளியுறவுக் கொள்கை சரியானதுதானா என நான் வியப்படைகிறேன்.

பாகிஸ்தானுடனான நமது மோதல், நமது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது குறித்து நான் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளேன். பாகிஸ்தானுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன: ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்திலுள்ள நமது மக்களின் நிலைமை. கிழக்கு வங்காளத்தில் நமது மக்களின் நிலைமை காஷ்மீரில் இருப்பதைவிட சகிக்க முடியாததாக இருக்கிறது. அனைத்து செய்தி ஏடுகளும் இதனை உறுதி செய்துள்ளன. எனவே, நாம் கிழக்கு வங்காள விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை காட்டியிருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், காஷ்மீர் பிரச்சினையில் நம் ஆற்றல் முழுவதையும் வீண்விரயம் செய்து வருகிறோம்.

ஒரு போலியான பிரச்சினைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்ற பிரச்சினைக்காகவே நாம் பெரும்பாலும் போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான பிரச்சினை, யார் செய்வது சரி என்பது அல்ல; எது சரி என்பதே. இதையே முக்கியப் பிரச்சினையாக வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது எப்போதுமே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்திய வரைபடத்தில் செய்தது போல, இந்து மற்றும் பவுத்தர்கள் வாழும் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுங்கள்.

காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பகுதிகளைப் பற்றி உண்மையில் நாம் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை அது. இப்பிரச்சினை குறித்து அவர்கள் விரும்புவதுபோல முடிவு செய்யட்டும்; அல்லது நீங்கள் விரும்பினால் அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: அதாவது போர் நிறுத்தப் பகுதி, பள்ளத்தாக்குப் பகுதி மற்றும் ஜம்மு – லடாக் பகுதி என்று பிரிக்கலாம். பள்ளத்தாக்கில் மட்டும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தலாம். இது தொடர்பாக எனக்கு ஓர் அச்சம் உள்ளது. அதாவது ஒட்டுமொத்த வாக்கெடுப்பாக இருக்கக்கூடிய உத்தேச பொதுமக்கள் வாக்கெடுப்பில், காஷ்மீரைச் சேர்ந்த இந்துக்களும் பவுத்தர்களும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் பிணைக்கப்படும் ஆபத்து உள்ளது.

இந்நிலைமையில் கிழக்கு வங்கத்தில் இன்று சந்திக்கும் அதே பிரச்சினைகளையே நாம் சந்திக்க நேரிடும். எனது பதவி விலகலுடன் பெரிதும் தொடர்புடைய நான்காவது விஷயத்துக்கு இப்போது வருகிறேன். அமைச்சரவை என்பது ஏற்கனவே பல்வேறு குழுக்களால் எட்டப்பட்ட முடிவுகளைப் பதிவு செய்யும் வெறும் பதிவு அலுவலகமாக மாறியுள்ளது. ஏற்கனவே நான் சொல்லியது போல, அமைச்சரவை இப்போது குழுக்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறை தொடர்புடைய அனைத்து முக்கிய விஷயங்களையும் அக்குழுவே கையாண்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து விஷயங்களும் பாதுகாப்புக் குழுவினரால் சரி செய்யப்படுகின்றன.

அமைச்சரவையின் உறுப்பினர்கள் இக்குழுக்களால்தான் நியமிக்கப்படுகின்றனர். இதில் எந்தக் குழுவிலும் நான் இல்லை. இரும்புத் திரைக்குப்பின்னால் அவர்கள் செயல்படுகின்றனர். இங்கு முக்கிய உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்கள் கொள்கையை உருவாக்குவதில் பங்கு கொள்ளும் எந்த வாய்ப்புமின்றி, கூட்டுப் பொறுப்பை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஓர் முரண்பாடான நிலையாகும்.

பதவி விலக வேண்டும் என்ற முடிவுக்கு நான் வர என்னை இறுதியாக இட்டுச்சென்ற ஒரு விஷயம் குறித்து இப்போது கூறுகிறேன். இந்து சட்டத் தொகுப்பிற்கு நேர்ந்த கதிதான் அது. 1947 ஏப்ரல் 11 அன்றுதான் இந்த சட்டத்தொகுப்பு வரைவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நான்காண்டு காலம் உயிரோடிருந்தது. அதன் நான்கு சட்டக் கூறுகள் ஏற்கப்பட்ட பின்னர் அது கேட்பாரின்றி செத்து மடிந்தது.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 14(2), பக்கம் : 1322

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்.

Posted in Periyar by mugund on February 9, 2009
Statutory Warning:  The below content is NOT suitable for all readers. I’m not responsible if any of your sentiments got hurt by reading it.

“வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க”

என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் கருத்துக்கள் “உயர் எண்ணங்கள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர் நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம், நமக்கு நீண்ட நாளாகவே தடைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்துள்ளார்கள்.

தடைக்கற்கள்

மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவும், மதம்,சாஸ்திரம்,முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படிச் செய்துவிட்டார்கள். பொதுவாகக் கடவுளைப் புகுத்தியவன், கடவுள் பக்திக்கு முதல் நிபந்தனையாகக் கடவுள் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஏற்படுத்தினான். கடவும் பஞ்சேந்திரியங்களுக்கு எட்டமுடியாத வஸ்து, அறிவுக்கு எட்டமுடியாத வஸ்து, பஞ்சேத்திரியம் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த அய்ந்துக்கும் கடவுள் எட்டமாட்டார்; இந்த அய்ந்தும் கொண்டு கடவுளைத் தேடவும் கூடாது என்பதாகும்.

இந்த இந்திரியங்களை எல்லாம் மீறிச் சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது. இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளையும் போட்டுக் கடவுளைச் சொன்னான். கடவுள் என்றால் அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும்; எங்கே ஏன் எப்படி என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள். கடவுள் போலவே மதத்தைம் பற்றியும் என்ன என்று சிந்திக்கக்கூடாது; மதம் எப்போது ஏற்பட்டது – யாரால் ஏற்பட்டது என்ன ஆதாரம் என்று சிந்திக்கக்கூடாது; சிந்தித்தால் மதம் போய்விடும். எனவே, அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

சாஸ்திரம்

கடவும், மதம் போலவே சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக்கூடாது; எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றோனோ அவன் நரகத்திற்கும் போவான் என்றும் எழுதி வைத்துள்ளார்கள். எனவே, பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது ஆகும். நமது இழிநிலை, முட்டாள்தனம் மாறவேண்டுமானால், நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை. பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாகப் பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாகவே நழுவி விடும்.

நாத்திகம் என்றால்

நமது கொள்கை பகுத்தறிவு – பகுத்தறிவு என்றால் நாத்திகம் ஆகும்; அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாத்திகமாகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதவர் என்று கூறப்பட்டாலும் – அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது; எல்லாவிதமான சர்வ சக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கடவுள், நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்திற்கு, ஒன்றுதான். ஆனால், நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள். நம்மைத் தவிர்த்த மற்ற உலககிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை. நமது கடவுளுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள். மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை. நமது நாட்டுக் கடவுளுக்கு மட்டும் மனிதனுக்கு வேண்டியவை எல்லாமுமே வேண்டும்.

மூடநம்பிக்கை

மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் – யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுளுக்கு இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதரில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள். இப்படி ஏராளமாகப் பேதங்களும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களும், காரியத்தில் கேடான குணங்களும் கடவுளுக்குக் கற்பித்திருக்கின்றார்கள். இவைகளையெல்லாம் நம்புவது தான் மூடநம்பிக்கை. நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து ஏற்கின்றதை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளுவது தான் பகுத்தறிவு

கடவுள் ஏன் ஒழிய வேண்டும்?

நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவிற்கு ஏற்ற கடவுள் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்தும் பார்த்தால் இல்லவே இல்லை. உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

ஒழுங்கான கடவுள் ஏது?

நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே; சைவ சமயத்தில் கந்தன் – முருகன் – சும்பிரமணியன் என்று ஒரு கடவுள். அவனுக்கும் போட்டியாக வைணவத்தில் ராமன் என்று ஒரு கடவுள். இப்படியாகப் பல கடவுள்கள் கூறப்படுகின்றன. இந்த கந்தனைப்பற்றிய கதையும் அசிங்கம் – ஆபாசமாக இருக்கும்; ராமனைப் பற்றிய கதையும் ரொம்பவும் ஒழுக்கக் கேடாக இருக்கும். காரணம் இந்தக் கதைகள் ரொம்பக் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டமையால் பகுத்தறிவைப் பற்றிய கவலையே இல்லை. மக்கள் அறிவுகொண்டு சிந்தித்தல் வேண்டும். அதுவே பகுத்தறிவை வளர்க்கும். பகுத்தறிவிற்குத் தடையாக இருப்பது கடவுள், மூடநம்பிக்கை, சிந்திக்க ஒட்டாத நிலை.

சிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்.

Ethinic conflict in Sri Lanka ???

Posted in General by mugund on February 3, 2009

Really gud one…

This video can be an eye opener for all those peeples who has wrong information regarding the Tamils in the Sri Lanka.

Note:-  I’m extremely unhappy when people over here still says that “how come people went there for  work can ask for seperate nation?”….This video is for them..!

 

 

State of Indian Agriculture… :-(

Posted in General by mugund on January 23, 2009
நீங்கள் நாளிதழ்களையும் இதழ்களையும் மட்டும் படிப்பவர் என்றால், நம் நாட்டில் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. 1980களில் 3.5 சதவீதமாக இருந்த அது, 1990களில் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. விவசாயத்தில் முதலீடு குலைந்துவிட்டது. இந்திய தேசிய மாதிரி தகவல்சேகரிப்பு நிறுவனத்தின் (என்.எஸ்.எஸ்.ஓ.ஐ.) கணக்கெடுப்பின்படி, விடுதலை பெற்ற பிறகு 1990களில்தான் வேலை உருவாக்கம் மிகக் குறைந்த சதவீதமாக இருந்துள்ளது. நாட்டின் ஊரகப் பகுதிகளில் இது ஆண்டுக்கு 0.7 சதவீதத்துக்கும் குறைவு. 1980களில் விவசாயம் அற்ற பிற துறைகளில் வேலைவாய்ப்பு இரட்டிப்பானது, ஆனால் அது தற்போது தேக்கநிலையை அடைந்துள்ளது. கிராமப் பகுதி வளர்ச்சி சரிந்துள்ளது, ஊரக கடன் வழங்கும் முறை குலைந்துள்ளது. இதன் காரணமாக சிறு விவசாயிகள் நிலத்தை இழக்கும் வேகம் கடுமையாக அதிகரித்துள்ளது.
 
 
What are we going to do to stop it ???
Tagged with: